இன்று முதல் உங்க கம்ப்யூட்டரில் இது வேலை செய்யாது! அப்டேட் பண்ணுங்க!!

  சாரா   | Last Modified : 15 Jan, 2020 01:21 pm
ini-intha-windows-ungal-computeril-vela-seiyudhu-microsoft-athiradhi-arivippu

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 7‌ என்ற ஆப்ரேட்டிங் சிஸ்டம் மென்பொருள் வரும் ஜனவரி 14ம் தேதிக்கு பிறகு செயல்படாது என மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. 

மைக்ரோ சாப்ட் நிறுவனத்தால் கடந்த 2015ஆம் ஆண்டு விண்டோஸ் 10 ஓஎஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் விண்டோஸ் 10 ஓஎஸ் மென்பொருள் பயன்படுத்துவதற்கு  எளிதாக இல்லை என்பதால் பலரும் இன்று வரையில் தொடர்ந்து விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தையே பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், விண்டோஸ் 10 மென்பொருளை பயனர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக மைக்ரோ சாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 பயன்பாட்டை தடை செய்ய முடிவெடுத்துள்ளது.

எனவே வரும் பொங்கல் தினத்தில் இருந்து கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 7 மென்பொருள் இயங்காது. அதனால் உங்களது கம்ப்யூட்டர்களில் உடனடியாக விண்டோஸ் 10 மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close