தர்பார் ரிலீஸுக்காக வசூல் வேட்டை!? விதிகளை மீறும் ரஜினி மக்கள் மன்றங்கள்?!

  சாரா   | Last Modified : 05 Jan, 2020 05:20 pm
darbar-fans-collection-cheating

வியாழக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகும் தர்பார் படத்தைக் கொண்டாட ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகிறார்கள்.  வெளிநாடுகளிலும் தர்பார் திருவிழா என்ற பெயரில் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகசமூகத் தளங்களில் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. 

இந்த நிலையில்  ரஜினி மக்கள் மன்றம் பெயரில் நடத்தப்படும் சில ஊர்களில் வசூல் வேட்டை நடைபெறுவதாக ரசிகர்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அமெரிக்காவில் சிக்காகோ, சியாட்டில், டாலஸ் போன்ற ஊர்களில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தர்பார் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். இதற்கான செலவுகளுக்காக அங்குள்ள கடைகளில் பணம் வசூல் செய்துள்ளதாக குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர்.

ரஜினி மக்கள் மன்ற விதிமுறைகளின் படி, தலைமை மன்ற அனுமதி இல்லாமல் நன்கொடை வசூல் செய்வதற்கு அனுமதி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. தலைமை மன்ற அனுமதியுடன் தான் இந்த வசூல் செய்யப்படுகிறதா? அல்லது தன்னிச்சையாக பண வசூல் செய்கிறார்களா? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

முன்னதாக, ரஜினியை சந்திப்பதற்காக வெளிநாட்டு ரசிகர்களிடம் பண வசூல் செய்வதாக பரவலான குற்றச்சாட்டுகள் வெளிவந்தது. இந்நிலையில் தர்பார் படக் கொண்டாட்டங்களுக்காக ரஜினி மக்கள் மன்றம் பெயரிலேயே வசூல் வேட்டை நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதெல்லாம் ரஜினிக்கு தெரியுமா? ரசிகர்கள் அல்லாதவர்களை நியமனம் செய்ததால் ஏற்படும் குழப்பமா என்று ரஜினி ரசிகர்களில் சிலர் ஆதங்கத்துடன் கேட்கிறார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close