பிரட் வாங்கும்போது நினைவில் கொள்ள வேண்டியவை ...!!

  சாரா   | Last Modified : 05 Jan, 2020 11:18 pm
tips-to-know-before-you-buy-a-bread

இன்றைய நாகரீக உலகத்தில் 'பிரெட்' தவிர்க்க முடியாத உணவாகிவிட்டது. ஆனால் வெள்ளை பிரட் நல்லதா? இல்லை பிரவுன் பிரட் நல்லதா என பலரும் குழப்பத்தில் இருக்கின்றனர். அதை பற்றி இங்கே காண்போம்.

1. பிரட் வாங்கும்போது முழுதானியம்(whole grain) என போட்டிருக்கிறதா என பார்த்து வாங்குங்கள். இவைகளில் நார்சத்து, புரோட்டின், விட்டமின், மினரல் ஆகியவை அடங்கியுள்ளன. பருப்பு வகைகள், பிரவுன் அரிசி, கோதுமை, பார்லி, ஓட்ஸ் ஆகியவை அடங்கிய பிரட்டுகளும் கடைகளில் விற்பதுண்டு.

2. லேபிள் இருந்தால்தான் அவற்றில் அதிகபட்சம் 16 வகையான பருப்பு வகைகளும் தானியங்களும் அடங்கியவை என அர்த்தம். லேபிள் இல்லையென்றால் அவற்றில் வெறும் 50 சதவித சத்துக்களே அடங்கியிருக்கும். மீதி மைதா போன்ற பொருட்கள் அடங்கியிருக்கும்.

3.வெறும் கோதுமை அதிகம் நிறைந்த பிரட்டுகளில் சுவை இருக்காது ஆனால் ஓட்ஸ், பார்லி, பிரவுன் அரிசி ஆகியவைகளில் செய்யப்படும் பிரட்டுகளில் சுவையும் இருக்கும். சத்துக்களும் அதே அளவு இருக்கும்.

4.பொதுவாக பிரட்டில் ஈஸ்ட் கலப்பதால் எளிதில் கெட்டுபோகும் வாய்ப்புண்டு. ஆகவே தயாரிக்கும் தேதியை முக்கியமாக பாருங்கள். எந்த பிரட்டையும் 1 வாரத்திற்கு மேல் வைத்து சாப்பிடக் கூடாது.

5.வெள்ளை பிரட் வாங்காதீர்கள். உடலுக்கு நல்லதல்ல. அவை முற்றிலும் மைதாவினால் செய்யப்படுபவை. ஆகவே சுவைக்காக பிரட் வாங்குவது தவறு.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close