காதலிக்க மறுத்ததால் முகநூலில் நிர்வாணப் புகைப்படம்! போலீசாரிடம் சிக்கிக் கொண்ட சைக்கோ காதலன்!

  முத்து   | Last Modified : 06 Jan, 2020 11:06 am
arrested-creating-womans-fake-fb-account-posting-her

மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூர் மாவட்டத்தில் பிரசாந்த் ராஜக் என்னும் 22 வயது இளைஞர் ஒருவர் 27 வயது இளம் பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்துள்ளார். அவர் பல முறை கூறியப்போதும் அப்பெண் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் அப்பெண்ணிடம் சென்ற பிரசாந்த் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படியும் அப்பெண்ணை வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்த் ராஜக், சமூக வலைதளமான ஃபேஸ் புக்கில் அந்த இளம்பெண்ணின் பெயரிலேயே கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். மேலும் அந்த ஃபேஸ்புக் கணக்கில் அந்த பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து, ஆபாச பதிவுகளை வெளியுட்டுள்ளார். திருமணத்திற்கு தயாராகி வரும் வேளையில் இந்த பதிவுகள் குறித்து அறிந்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து அந்த இளம்பெண் சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் பிரசாந்த் ராஜக்கை கைது செய்து விசாரணையை நடத்தினர். அப்போது தான் ஒரு தலையாக காதலித்து வந்த பெண், வேறு ஒருவரை திருமணம் செய்ய இருப்பதால், அந்த பெண்ணுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி திருமணத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். இதனால் பிரசாந்தின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close