போதையில் பெற்ற மகளையே சீரழித்த தந்தை! கதறியழுத மகள்!

  முத்து   | Last Modified : 06 Jan, 2020 07:02 pm
father-abused-his-own-daughter-while-drunk

தூத்துக்குடி மாவட்டத்தில் எந்நேரமும் குடிபோதையில் மிதந்து கிடக்கும் கூலித் தொழிலாளி ஒருவர் வீட்டில் எப்போதும் மனைவியுடன் சண்டை போடுவது வழக்கம். வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. பல நேரங்களில் அந்த கொடிய தந்தை மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இந்த விஷயத்தை யாரிடமும் வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் மகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த தாய் என்னவென்று சிறுமியிடம் பலமுறை விசாரித்து உள்ளார். அப்போதெல்லாம் தன்தையின் வெறிச் செயலை சிறுமி கூற மறுத்ததாக கூறப்படுகிறது. எனினும் அப்பேதெல்லாம் அவர் தொடர்ந்து அழுதுள்ளார். இந்நிலையில் நிலைமையை உணர்ந்த தாய், மகளிடம் திவிரமாக விசாரித்தார். அப்போது உண்மையை கூறிய சிறுமி, தந்தை தன்னை தினமும் செய்த சித்ரவதைகளை சொல்லி அழுதுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததார். புகாரை ஏற்றுக் கொண்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கூலித்தொழிலாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.   

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close