சென்னையில் வெளுத்து வாங்கும் மழை! மகிழ்ச்சியில் மக்கள்! 

  சாரா   | Last Modified : 06 Jan, 2020 09:42 am
rain-forecast-today

கடந்த மூன்று நாட்களாக சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலையில் இருந்தே சென்னையில் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த ஒரு மாதமாக மிகவும் குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது. 

இந்நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் வடபழனி , அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், வள்ளுவர் கோட்டம், கோயம்பேடு ஆகிய இடங்களில் இன்று அதிகாலையில் இருந்தே தொடர்ந்து மழை செய்து வருகிறது.

தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இன்று மாலை வரை இந்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவும் சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close