தமிழகத்தில் நாளை மழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுது...வெதர்மேன் தகவல்!

  சாரா   | Last Modified : 06 Jan, 2020 04:16 pm
rain-forecast-in-tn

கடந்த மூன்று நாட்களாக சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலையில் இருந்தே சென்னையில் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த ஒரு மாதமாக மிகவும் குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது. 

இந்நிலையில், கடந்த 25 ஆண்டுகளில், 1995ம் ஆண்டுக்கு பிறகு இந்த புத்தாண்டு ஜனவரியில் தான் அதிக மழை பெய்துள்ளதாக வெதர்மேன் பிரதீப் தகவல் தெரிவித்துள்ளார். இந்த ஜனவரியில் தான் அதிக குளிர்ச்சியான வானிலை நிலவுவதாகவும் இன்று தொடங்கி, அடுத்த மூன்று நாட்களுக்கும் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையமும் அடுத்த மூன்று தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இரவு வரையில் இந்த  மழை நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாதம் 9ம் தேதியுடன் பருவமழை விடைபெறுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close