வகுப்பறையிலேயே சிறுநீர் கழித்த மாணவி! அவமானத்தால் தற்கொலை செய்த சோகம்!

  முத்து   | Last Modified : 06 Jan, 2020 10:35 am
andhra-girl-student-suicide

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்காரெட்டிகூடாவில் பெண்கள் கல்லூரியில் சுவாதி என்ற மாணவி படித்து வந்தார். கடந்த வாரம் கல்லூரியில் சிறப்பு வகுப்பு நடைபெற்றுள்ளது. அப்போது சுவாதி சிறுநீர் கழிக்க செல்ல வேண்டுமென அனுமதி கேட்டார். ஆனால் ஆசிரியை அனுமதி மறுத்ததால் வெகு நேரமாக சிறுநீரை அடக்க முடியாமல் வகுப்பறையிலேயே சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த சக மாணவிகள் சிரித்து விட வேதனைப்பட்டார்.

பின்னர் விடுதிக்கு சென்ற மாணவி  ஸ்வாதி அங்கு தனது அறையில் தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சுவாதி உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். மாணவி உயிரிழப்புக்கு கல்லூரி நிர்வாகமே காரணம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close