ஜேஎன்யூவில் பயங்கரம்! மாணவர்களின் தலைவி ஆயிஷ்கோஷ் மீது கொடூர தாக்குதல்! ரத்தம் சொட்ட சொட்ட பேட்டி!

  சாரா   | Last Modified : 06 Jan, 2020 10:19 am
jnu-students-attacked

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்று பெரும் மோதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. மாணவர் யூனியன் தலைவர் ஆயிஷ் கோஷ் தாக்கப்பட்டு மண்டை உடைந்து ரத்தம் கொட்டும் அளவுக்கு தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதிக் கட்டணம் உள்ளிட்டவை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாணவர்கள் நடத்திய கண்டன பேரணியில் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. 

இந்த கல்வீச்சு சம்பவத்திற்கு பின்னர், மேலும் பலர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் திபுதிபுவென புகுந்துள்ளனர். இப்படி திடீரென மாணவர்கள் கூட்டத்திற்குள் புகுந்த கும்பலில் இருந்தவர்கள் அனைவருமே முகத்தில் துணியை வைத்து கட்டிக் கொண்டு தங்கள் அடையாளத்தை மறைக்கும் வகையில் வந்துள்ளனர். ஹாஸ்டல் அறைக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்து நொறுக்கி உள்ளனர். அவர்கள் கைகளில் உருட்டுக்கட்டை, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்துள்ளன. அப்போது மாணவர் யூனியன் தலைவரான ஆயிஷ் கோஷ் என்ற மாணவியின் தலையில் அந்த நபர்கள் ஓங்கி அடித்துள்ளனர்.

இதனால் அவரது தலையில் இருந்து குபுகுபுவென ரத்தம் வழிந்தபடி இருந்தது. வீடியோ ஒன்றில் அந்த நிலையிலும், அவர் பேசியுள்ளார். முகத்தில் மாஸ்க் அணிந்த சிலர் என்னை மிக மோசமாக தாக்கினர். என்னால் இப்போது பேச முடியாத நிலையில் இருக்கிறேன், என்று தழுதழுத்த குரலில் ஆயிஷ் கோஷ் கூறுகிறார்.

newstm.in
 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close