மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்! ஜேஎன்யூவில் என்ன நடந்தது? அமித்ஷா விசாரணை!

  சாரா   | Last Modified : 06 Jan, 2020 10:33 am
students-attacked-in-jnu

நேற்று ஜேஎன்யூ மாணவர்கள் மர்ம கும்பலால் தாக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து டெல்லி கமிஷ்னர் அமுல்யா பட்நாயக்குடன் விசாரித்தார். 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் தாக்கப்பட்டது நாடு முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த தாக்குதலை நடத்தியது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. 
நேற்று மாலை டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் மாணவர்கள் மிக மோசமாக காயம் அடைந்தனர். 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close