போதையில் நல்ல பாம்புடன் விளையாடிய ஆசாமி! கடித்து விட்டு பாம்பு உயிரிழந்த விநோதம்!!

  சாரா   | Last Modified : 06 Jan, 2020 10:34 am
video-shows-drunk-youth-fighting-reptile-despite-getting-repeatedly-bitten

பாம்பை கண்டால் படை நடங்கும் என்ற பழமொழி உண்டு. அதுவும் நல்லபாம்பு என்றால் அனைத்து மக்களும் தெறித்து ஓடுவர். ஆனால் அதற்கு எதிர்மறையாக சம்பவம் ஒன்றை தான் இங்கு பார்க்க போகிறோம். நல்ல பாம்பு ஒன்று பலமுறை கடித்தம் இளைஞருக்கு ஏதும் நிகழவில்லை. மாறாக அந்த பாம்பு உயிரிழந்த நிகழ்வு ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது. ஆற்றுப்பகுதியில் வெட்ட வெளியில் அமர்ந்தவாறு  இளைஞர் ஒருவர் மது அருந்தியுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் தலைக்கேறிய போதையால் அந்நபர் அங்கேயே படுத்துவிட்டார்.

அப்போது அவர் அருகில் ஒரு கருநாக பாம்பு ஒன்று படமெடுத்து ஆடியது. சத்தம் கேட்டு குடிகார ஆசாமி போதையிலிருந்து எழுந்து பாம்பை கண்டு பயப்படாமல் அதனோடு விளையாடினார் . ஆனால் அந்த பாம்பு அவரை பலமுறை கொத்தியது. எனினும் அஞ்சாத அந்த நபர் மீண்டும் மீண்டும் பாம்பை சீண்டினார். ஒரு கட்டத்தில் அவரை கண்டு பாம்பு பயந்து ஓடியது. எனினும் அதனை விடாமல் துரத்தி துரத்தி பிடித்து அந்நபர் விளையாடியப்போது, பாம்போ வழக்கம்போல் மறுபடியும் வரை கடித்தது. அப்போதும் அவர் பயப்படாமல், கத்தாமல் பாம்பை தனது தோள் மீது தூக்கி போட்டுக்கொண்டு சுத்தினார் . இதில் பாம்பு உயிரிழந்தது. இது தொடர்பான வீடியோ சமூகவளைத்தலங்களில் வைரலாகி வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close