பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி! தந்தையும் உள்நோயாளியாக சிகிச்சை பெறுகிறார்!

  சாரா   | Last Modified : 06 Jan, 2020 10:32 am
perarivaalan-hospitalized

பேரறிவாளனின் தந்தை ஞானசேகரனுக்கு 78 வயதாகிறது. வயோதிகத்தின் காரணமாக ஞானசேகரனுக்கு பல்வேறு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக வாணியம்பாடி, கிருஷ்ணகிரி மற்றும் நாட்ராம்பள்ளி மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். அதன் பின்னர், பேரறிவாளனின் தந்தைக்கு சிறுநீராக கோளாறு, நரம்பு கோளாறு, ஆஸ்துமா மற்றும் நுரையீரல் கோளாறு, மலச்சிக்கல் ஆகியன முற்றிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், மேல் சிகிச்சைக்காக சென்னை காவேரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இந்நிலையில், இன்று (ஜனவரி 6) சென்னை காவேரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது தந்தையின் சிகிச்சையை ஒரே மகனான பேரறிவாளன் உடனிருந்து கவனித்து வருகிறார். மேலும் பேரறிவாளனுக்கும் ரத்த அழுத்தம், சிறுநீர் நோய் தொற்று, முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு சிறப்பு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற சென்னை போன்ற பெரு நகரத்தில் மட்டுமே வாய்ப்பு உள்ளதால் அவருக்கும் சென்னை காவேரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனடிப்படையில் காவேரி  மருத்துவமனையில் பேரறிவாளனும் தற்போது சிகிச்சை பெறுகிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close