ஹர்திக் பாண்ட்யா காதல் விவகாரம்! தந்தைக்கே தெரியாத ரகசியம்!!

  சாரா   | Last Modified : 06 Jan, 2020 10:49 am
harthik-pandya-engagement


கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யாவும், நடிகை நடாஷாவும் திடீர் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட விஷயம் தங்களுக்கே தெரியாது என்று ஹர்த்திக் பாண்ட்யாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை கோலாகலமாக தனது காதலியும், நடிகையுமான நடாஷாவுன் வெளிநாட்டில் கொண்டாடிய பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, திடீரென யாருக்கும் அறிவிக்காமல், திருமணத்திற்கான நிச்சயதார்த்தமும் செய்துக் கொண்டார். பின்னர், தங்களது நிச்சயதார்த்தக் குறித்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் திருமண நிச்சயதார்த்தம் பற்றி தங்களுக்கே தெரியாது என்றும், அவர் வெளியிட்டிருந்த புகைப்படங்களைப் பார்த்து தான் தாங்களே தெரிந்து கொண்டதாகவும் ஹர்திக்கின் தந்தை கூறியுள்ளார். மேலும் ‘நடாஷா நல்ல பெண். அவர்கள் இருவரும் விடுமுறையைக் கொண்டாட தான் துபாய்க்கு செல்கிறார்கள் என நினைத்தோம். ஆனால் நிச்சயதார்த்தம் விவகாரம் பற்றி எனக்குத் தெரியாது’ எனக் கூறியுள்ளார்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close