இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை! கவர்னர் தகவல்

  சாரா   | Last Modified : 06 Jan, 2020 01:13 pm
dual-citizenship-for-sri-lankan-tamil-refugees

தமிழகத்தில் 2020ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று காலையில் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அந்த உரையில் இடம் பெற்றிருந்த முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு மத்திய அரசினை வலியுறுத்தும்.

டெங்கு, சிக்குன்குனியா, மலேரியாவைத் தடுக்க ஏழைக் குடும்பங்களுக்கு விலையில்லா கொசுவலை வழங்கப்படும் 

கல்லூரி இடைநிற்றல் மாணவர்களில் 1 லட்சம் பேரை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும்

சேலம் தலைவாசலில் ரூ.1000 கோடி மதிப்பிலான கால்நடை அறிவியல் ஆராய்ச்சிக்கான மேம்பட்ட ஒருங்கிணைந்த கல்வி நிறுவனத்திற்கு விரைவில் அடிக்கல்

ஜெயலலிதாவிற்கு சென்னை மெரினாவில் 50.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் நினைவிடப் பணிகள் மிக விரைவில் முடிக்கப்படும்.

தமிழ்நாட்டிற்குள் பாய்கின்ற நதிகளை இணைக்கும் பணியை மேற்கொள்ளும் விதமாக காவிரி-குண்டாறு ஆறுகள் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தும்.

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழத்தில் தமிழ் இருக்கைக்கு ரூ.1 கோடி நிதி வழங்கப்பட்டள்ளது

வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு உறுதிப்படுத்தப்படும்

2019-2020 ஆம் ஆண்டில், சுய உதவிக்குழுக்களுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

17 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களை விரைவில் விடுவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close