நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

  சாரா   | Last Modified : 06 Jan, 2020 01:14 pm
today-last-date-for-applying-neet-exams

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் மே 3-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடந்த டிசம்பர் 2-ம் தேதி தொடங்கியது.  இன்று நள்ளிரவு 11.50 மணி வரை மாணவர்கள் நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதே சமயம் தேர்வுக்கான  கட்டணத்தை நாளை (ஜனவரி 7) நள்ளிரவிற்குள் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1.5 லட்சம் பேர் உட்பட நாடுமுழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

ஆன்லைனில் விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்தில் ஏதாவது திருத்தங்கள் இருந்தால் இம்மாதம் 15ம் தேதியிலிருந்து 31ம் தேதிக்குள் திருத்தங்கள் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் மார்ச் மாதம் 27ம் தேதியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் என நாடுமுழுவதும் 154 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close