நீட் தேர்வு மதிப்பெண்களில் புதிய மாற்றம்!

  சாரா   | Last Modified : 06 Jan, 2020 02:19 pm
neet-2020-latest-update

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, தேசிய அளவிலான நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 2 மாணவர்களுக்கான நீட் தேர்வு, மே3ல் நடக்கிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, டிசம்பர், 2ல் துவங்கியது. ஆன்லைனில் நீட் தேர்வுக்காக பதிவு செய்யும் தேதி  டிசம்பர் 31ம் தேதியோடு முடிய இருந்த நிலையில், ஜனவரி, 6 (இன்று வரை) நீட்டிக்கப் பட்டுள்ளது.

                                                         

இந்நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் மாற்றுத் திறனாளிகள் நல இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் தொடர்பான சட்டத்தின் படி, அவர்களுக்கு உயர்கல்வியில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்படி, மருத்துவ படிப்பில் மாற்றுத் திறனாளி மாணவர்களும் சேரும் வகையில், அவர்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண்ணிலும் சலுகை வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. இந்தச் சலுகையை மாணவர்கள் பலர் பயன்படுத்தாததால், 5 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே மருத்துவ படிப்பில் சேர்வதாக மருத்துவ கல்வி இயக்குனரக ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு அவர்களுக்கான சலுகைகளை தெரிவித்து, நீட் தேர்வில் அதிகம் பங்கேற்க தலைமை ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close