பதவியேற்றதும் சுவர் ஏறி தப்பி ஓடிய கவுன்சிலர்! : மதுரை அருகே பரபரப்பு!

  சாரா   | Last Modified : 06 Jan, 2020 02:01 pm
councilor-escaped-from-party-mens

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றார்கள். மேயர் பதவிக்கு கவுன்சிலர்கள் வாக்களித்து வெற்றி பெற வைக்க முடியும் என்பதால் பல மாவட்டங்களிலும் சுயோட்சையாக நின்று வெற்றி பெற்றுள்ள கவுன்சிலர்களுக்கு பலத்த வரவேற்பும், கவனிப்பும் இருந்து வருகிறது. இந்நிலையில், மதுரை அருகே சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் பதவியேற்ற அடுத்த நிமிடமே அலுவலகத்தின் பின்பகுதி வழியாக சுவர் ஏறி குதித்து தப்பி சென்ற சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை அருகே உசிலம்பட்டி ஊராட்சியில் சுயேச்சையாக தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்ற அரவிந்தன் என்பவர் இன்று கவுன்சிலராக பதவி ஏற்றுக் கொள்வதற்காக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் கவுன்சிலர் பதவியை ஏற்றுக் கொண்ட அடுத்த சில நிமிடங்களில், அலுவலகத்தின் பின் பகுதியில் இருந்த சுவர் மீது ஏறி குதித்து தப்பி ஓடியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவியைப் பிடிப்பதற்காக அதிமுக, திமுக என இரு கட்சிகளும் பலத்த போட்டியில் இருப்பதால் இரு கட்சிகளுமே சுயோட்சை வேட்பாளர்களுக்கு வலை வீசி வருகிறார்கள். தற்போது இரு கட்சிகளும் சம அளவில் கவுன்சிலர்களை எண்ணிக்கையைக் கொண்டுள்ளதால், சுயோட்சை கவுன்சிலர்கள் யாருக்கு ஆதரவு தருகிறார்களோ அவர்களே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதனால் சுயேச்சை கவுன்சிலர் அரவிந்தன் ஆதரவைப் பெற இரு கட்சியைச் சேர்ந்தவர்களும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாசலில் தயார் நிலையில் இருந்த போது, யாருக்கும் தெரியாமல் இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களின் கண்களிலும் மண்ணைத் தூவி விட்டு, சுவர் ஏறி தப்பி ஓடியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close