17 வயது சிறுவனை திருமணம் செய்த 21 வயது பெண்! உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு!

  சாரா   | Last Modified : 06 Jan, 2020 03:08 pm
child-marriage-is-not-an-offense-if-women-attains-18yrs

திருமணம் செய்துக் கொள்வதற்கு பெண்களுக்கு 18 வயதை நிர்ணயித்துள்ளது இந்திய சட்டம். 18 வயதுக்கும் குறைவாக உள்ள பெண்ணை திருமணம் செய்தால் அந்த திருமணம் இந்திய சட்டப்படி குற்றம் என்றும், அப்படி திருமணம் செய்துக் கொள்பவரை சட்டப்படி கைது செய்து, சிறையில் அடைக்கவும்  சட்டத்தில் இடம் உள்ளது. இந்நிலையில், வயதில் மூத்த பெண், 18 வயதுக்கும் குறைவான சிறுவனை திருமணம் செய்தால், அந்த திருமணம் சட்டப்படி செல்லுமா? அந்த பெண்ணைக் கைது செய்து சிறையில் அடைக்க முடியுமா என்பது குறித்து நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில், 21 வயது பெண் ஒருவர் 17 வயது சிறுவனை திருமணம் செய்து கொண்டது குறித்த வழக்கு ஒன்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த திருமணத்தை குழந்தை திருமணமாக கருத முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த திருமண செயலை குற்றம் என்று கருதி அதற்கு தண்டனையும் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது. 

இந்த திருமணத்தில், தன்னை விட வயதில் குறைந்த பையனைத் திருமணம் செய்ததற்காக அந்த பெண்ணுக்கு தண்டனை வழங்க முடியாது என்றும், பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாகி விட்டதால் அந்த சிறுவனையும் தண்டிக்க முடியாது என்று என்று நீதிபதி மோகன் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close