JNU மாணவர்களின் மீது தாக்குதல்! ரத்த களறியான வளாகம்!

  சாரா   | Last Modified : 06 Jan, 2020 04:15 pm
attack-on-jnu-students

இந்தியாவில் 3 முக்கிய பல்கலைக்கழகங்களில், தொடர்ந்து இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பல்கலைக்கழக வளாகம் முழுவதுமே ரத்த ஆறு ஓடுகிறது. நேற்று டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற தாக்குதலுக்கு நாடு முழுவதும் அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மாணவர்களும், இளைஞர்களும் இந்த போராட்டங்களில் கலந்துக் கொண்டு தங்கள் எதிர்ப்பை அமைதியான முறையில் தெரிவித்து வருகின்றனர். ஆனால் சமூக விரோதிகளும் இந்த போராட்டங்களில் ஊடுருவிக் கொண்டு, போராட்டத்தை திசைத்திருப்பும் வகையில் வன்முறையைத் தூண்டுகின்றனர். 

சென்னையில் நடைப்பெற்ற போராட்டத்தில் காவலர் ஒருவர் கல்லூரி அடையாள அட்டையைக் கேட்டதும், நழுவிச் சென்ற பெண்களைப் போலவே டெல்லியிலும் மாணவர்கள் அல்லாதோரும் மாணவர்களின் பெயரில் வன்முறையைத் தூண்டி விடுகின்றனர். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இப்படி மாணவர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர்.

முதல் முறையாக டிசம்பர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தினுள் போலீசார் நுழைந்து அங்கே இருந்தவர்களின்  மீது எந்த பாரபட்சமும் இல்லாமல் தாக்குதல் நடத்தினார்கள். இதில் பலரும் காயமடைந்தனர். அதே போல் நேற்று  முகமூடி அணிந்தவர்கள் மாணவர்களை தாக்கினர். நேற்றைய இரவு 9.30 மணிக்கு மர்ம நபர்கள் முகமூடிகளை அணிந்துக் கொண்டு பல்கலைக்கழகத்தினுள் நுழைந்து சரமாரியாக தாக்கினார்கள். அதன் பின்னர் பல்கலைக்கழக வளாகம் முழுவதுமே ரத்த சக்தியாக சிதறிக் கிடந்தது. தலைநகரில் தொடந்து இப்படி ஞாயிற்றுக்கிழமைகளில் 3 பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதல் சம்பவங்களால் இந்தியாவின் பாதுகாப்பு தன்மை குறித்தும், மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் சந்தேகக் கேள்வி எழுந்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close