உஷார்!! 2020ல் பர்ஸ் பத்திரம்! இதை தெரிஞ்சுக்கோங்க!

  சாரா   | Last Modified : 18 Feb, 2020 09:28 pm
be-alert-in-2020

உலகம் முழுவதும் புத்தாண்டை கோலாகலமாக வரவேற்றார்கள். 2020ல் அடியெடுத்து வைத்து விட்டு எல்லோரும் அவரவர்களின் வேலையைப் பார்க்க கிளம்பியாச்சு. அதே போல் சைபர் கிரிமினல்களும் அவர்களுடைய வேலையை இந்த புது வருஷத்தில் பார்க்கத் துவங்கியிருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

இந்த 2020ம் வருஷத்தை சைபர் கிரிமினல்கள், இணையவழி பணப்பரிமாற்ற சேவைகளையே பெரிதும் குறி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து காஸ்பர்ஸ்கை தெரிவித்துள்ள தகவல்களின் படி, இந்த வருடம் முழுவதும் சைபர் கிரிமினல்கள் பெருமளவில் இணையவழி பணப்பரிமாற்றத்தில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் தற்போது நாடு முழுவதும் பண பரிமாற்றங்கள் பெருமளவில் டிஜிட்டல் முறையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே சமயம் தொழிநுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் மற்றும் ஆண்டிவைரஸ் நிறுவனமான காஸ்பர்ஸ்கை நிறுவனத்தின் பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு திகில் கிளப்பியுள்ளார்.

அதில், 2020 வருடத்தில் நிதித் துறையில் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளின் பாதுகாப்புக் குழுவினர் புதிய சவால்களை எதிர் நோக்கி இருக்க வேண்டும் என்றும், இணையவழி பணப்பரிமாற்ற சேவைகளையே சைபர் கிரிமினல் கும்பல்கள் குறிவைத்துள்ளதாக தெரிகிறது. அதனால, ஸ்டைலா ஆன்லைன்ல பர்சேஸ் பண்றேன், உடனடியா நெட்ல டிரான்ஸ்பர் பண்றேன் என்று அறிமுகமில்லாத இணையதளங்களின் வழியாக பணபரிமாற்றம் செய்வதை தவிர்த்து உங்களுடைய பர்ஸை பத்திரமா பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close