JNU தாக்குதலுக்கு திரையுலக பிரபலங்கள் கடும் எதிர்ப்பு!

  சாரா   | Last Modified : 06 Jan, 2020 04:36 pm
celebrities-against-jnu-issue

டெல்லியில் நேற்று இரவு 9.30 மணியளவில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்த நபர்களால் மாணவர்களின்  மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். நேற்று நடத்த தாக்குதல் சம்பவத்தில், மாணவர்களின் போராட்டத்தில் ஊடுருவியவர்கள், ஆசிரியர்களைப் போலவே பல்கலைக் கழகத்தின் வளாகத்திற்குள் நுழைவது அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

சுமார் 70க்கும் மேற்பட்டவர்கள் இப்படி மாணவர்களுடன் கலந்துக் கொண்டு திடீர் தாக்குதல் நிகழ்த்தியதில் பல்கலைக்கழகத்தின் வளாகம் முழுவதுமே ரத்தக்களறியாக போர்க்களம் போன்று காட்சியளித்தது. 

மாணவர்களின் மீதான இந்த தாக்குதலுக்கு எதிராக பாலிவுட் நடிகை, நடிகர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.தாக்குதலின் வீடியோக்கள்,புகைப்படங்கள் தாக்குதலின் உச்சத்தை தெளிவுபடுத்துகிறது என்று நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் கஷ்யப், சமூக ஆர்வலர் ஷபானா ஆஸ்மி, ரித்தேஷ் தேஷ்முக் போன்ற பலர் தங்கள் கருத்துக்களை இந்த தாக்குதலுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.  இந்துத்வாவின் முழுமையான தாக்குதல் அங்கு நடைபெற்றுள்ளது என்று அனுராக் கஷ்யப் தெரிவித்திருந்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close