பொங்கல்  முதல் நாடு முழுவதும் ஒரே ரேஷன் அட்டை அமலுக்கு வருகிறது!

  சாரா   | Last Modified : 09 Jan, 2020 12:52 pm
pongal-first-nationwide-ration-card-to-be-implemented

ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் வரும் ஜனவரி15ம் தேதி முதல் 12 மாநிலங்களில் முதல் கட்டமாக இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் , மகாராஷ்ட்ரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, கோவா, மத்திய பிரதேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மூன்றரை கோடி பேர் இதனால் பயன் அடைவார்கள்.

இவர்கள் எந்த மாநிலத்திலும் எந்த ரேசன் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம், பணி, தொழில் நிமித்தமாக அடிக்கடி இடம் மாறும் கூலித் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் இதற்காக முகவரியை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஒரே ரேசன் கார்டு திட்டம் அமலுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அறிவித்திருந்த நிலையில், வருகிற 15ம் தேதி முதலே இத்திட்டம் அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close