JNU மாணவர்கள் மீதான தாக்குதல் நாட்டுக்கு ஏற்பட்ட தலைகுனிவு! சீமான் கண்டனம்!!

  சாரா   | Last Modified : 06 Jan, 2020 05:45 pm
seeman-condemns-attack-on-jnu-students

ஜே.என்.யு. மாணவர்கள் மீதான தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டுக்கே ஏற்பட்ட பெரும் தலைகுனிவாகும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். 

இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த முகமூடி அணிந்த சமூக விரோதிகள், மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. இது ஒட்டுமொத்த நாட்டுக்கே ஏற்பட்டப் பெரும் தலைகுனிவாகும்.

விடுதி கட்டண உயர்வு தொடங்கி குடியுரிமைச்சட்டத்திருத்தம் வரை அநீதிக்கெதிராகக்களத்தில் சமரசமற்று நிற்கும் மாணவப்பிள்ளைகளுக்கு ஆளும் வர்க்கத்தால் நேரடியாக விடப்பட்டிருக்கிற கொலைமிரட்டல் என்றும், இந்த தாக்குதலில் ஈடுபட்டக் கொடுங்கோலர்களை உடனடியாகக் கடுஞ்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close