பள்ளிகள் அருகே இதையெல்லாம் விற்க தடை! கலெக்டரின் அதிரடி அறிவிப்பு!

  சாரா   | Last Modified : 06 Jan, 2020 07:13 pm
prohibited-to-sell-all-these-near-schools-collector-s-action

அனைத்துப் பள்ளிகளிலும், பள்ளிகளைச் சுற்றியுள்ள 200 மீட்டர் சுற்றளவிலும் உள்ள கடைகளில் பொட்டல உணவுப் பொருட்களை விற்பனைச் செய்வதற்கு தடை விதிக்க வேலூர் மாவட்ட கலெக்டர் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில், சிபிஎஸ்இ, மெட்ரிக் உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் செயல்படும் உணவகங்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வருகிறது. இப்படி பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதால் மாணவர்களுக்கு இளம் வயதிலேயே உடல்பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், டிஸ்லிபிடெமியா, நாள்பட்ட அழற்சி, இதய நோய்கள் போன்றவை ஏற்படுகின்றன. இதனால், மாணவர்களின் அறிவாற்றலும், உடல் வளர்ச்சியும் பெருமளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன.

அதனால், இனி தனியார் பள்ளிகளில் இயங்கி வரும்   உணவகங்களில் பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகளைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளியைச் சுற்றிலும் உள்ள 200 மீட்டர் தொலைவுக்குள் உள்ள கடைகளிலும் இது போன்ற பொருட்களை விற்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close