‛எடப்பாடியை எதிர்த்தார் தங்கமணி’ : சொல்கிறார் சி.ஆர்.சரஸ்வதி

  Newstm Desk   | Last Modified : 18 Feb, 2019 11:49 am
special-interview-with-c-r-saswathi-about-tn-cm-edappadi-palanisamy

‛‛தமிழக முல்வராக சசிகலா பதவியேற்க முடியாத நிலை உருவான போது, கடும் எதிர்ப்புகளுக்கு இடையே, சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் ஆதரவால் தான், எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். அந்த நன்றியைக் கூட மறந்துவிட்டு நம்பிக்கை துரோகம் செய்தவர் தான் எடப்பாடி பழனிசாமி’’ என, அ.ம.மு.க., கட்சியின் மகளிர் அணியை சேர்ந்த, சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார். 

இது குறித்து, நம் நிறுவனத்திற்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் மேலும் கூறியதாவது:
"பன்னீர் செல்வம் முதல்வர் பதவி விலகிய பின், அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், சசிகலாவை முதல்வராக்கும் படி கவர்னரிடம் மனு அளித்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக, அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், அவரால் முதல்வர் பதவி ஏற்க முடியவில்லை. 

அதன் பின், டிடிவி தினகரனின் அறிவுறுத்தலின் படியும், சசிகலா எடுத்த முடிவின் அடிப்படையிலுமே, எடப்படாடி பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மீது நம்பிக்கை வைத்து, முதல்வர் பதவி ஒப்படைக்கப்பட்டது. அப்போது, முட்டி போட்டு தரையில் தவழ்ந்து சென்று, சசிகலாவை வணங்கினார். 

எடப்பாடி முதல்வராகிறார் என முடிவெடுக்கப்பட்டதும், கூவத்துாரில், தங்கமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தன்னை விட ஜுனியரான எடப்பாடிக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான், செம்மலை, ஓ.பி.எஸ்., பக்கம் சென்றார். 

கடும் எதிர்ப்புகளுக்கு நடுவிலும், பழனிசாமியை நம்பி, சசிகலா அவர்கள் முதல்வர் பொறுப்பை ஒப்படைத்தார். அத்தகைய பழனிசாமி, அதன் பின், பா.ஜ.,வின் பேச்சை கேட்டு, பன்னீர் செல்வத்துடன் இணைந்து, அவரும் துரோகம் செய்தார். துரோகம் செய்ததில், இருவரும் சமமானவர்களே. பழனிசாமி செய்தது சாதாரண துரோகம் அல்ல; நம்பிக்கை துரோகம். அதை ஒருபோதும் மன்னிக்க முடியாது. 

அ.தி.மு.க., பொது செயலராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என, இருவருமே அப்போது கேட்டுக் கொண்டனர். கட்சியில் உள்ள அனைவரின் விருப்பத்தின் அடிப்படையில் தான், அது நடந்தது. ஆனால், ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் வந்ததும், இருவரும், கட்சியையும் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது. இரட்டை இலை சின்னம் எங்களுக்கு நிச்சயம் திரும்ப கிடைக்கும். எம்.ஜி.ஆர்.,உருவாக்கிய, ஜெ.,வின் வெற்றி சின்னம் எங்களுக்கு திரும்ப கிடைக்கும்’’ என அவர் கூறினார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close