விஜயகாந்த் மிஸ்சிங்... தொண்டர்கள் ஃபீலிங்...

  Newstm Desk   | Last Modified : 06 Mar, 2019 12:10 pm
vijayakath-missing-dmdk-workers-feeling

மக்களவைத் தேர்தலையொட்டி, அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக் கூட்டம், சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, சிறப்புரை ஆற்ற உள்ளார்.

இதில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, பாமக, என். ஆர். காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதையொட்டி,  அதிமுக சார்பில் நாளிதழ்களில் இன்று  முழுபக்க விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடதுபுறம் பிரதமர் மோடியின் படமும், வலதுபக்கம் ஜெயலலிதா படமும் இடம்பெற்றுள்ளன.

இந்தப் படங்களுக்கு கீழே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ராமதாஸ், என்.ரங்கசாமி, என்.சேதுராமன், ஜான் பாண்டியன், பெஸ்ட் எஸ். இராமசாமி, கே.கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம்,  தனியரசு, ஜெகன்மூர்த்தி ஆகிய கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரின் படங்களும் இடம்பெற்றுள்ளன.

ஆனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவதில் இன்னும் இழுபறி நீடிப்பதால், விஜயகாந்தின் படம் இந்த விளம்பரத்தில் இடம்பெறவில்லை.

"அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறிய கட்சிகள், அதுவும் இரட்டை இலை சின்னத்திலேயே ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மட்டுமே போட்டியிடும் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் படங்கள் எல்லாம் அதிமுகவின் விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது. 

ஆனால், கட்சியின் தற்போதைய நிலைமையை உணர்ந்து அதிமுக கூட்டணியில் சேராமல், தாங்கள் கேட்டும் இடங்களை ஒதுக்கினால்தான் கூட்டணி என்று தலைவர் விஜயகாந்த் வீம்பு பிடித்து வருவதால், விளம்பரத்தில் கேப்டனின் படம் இடம்பெறாமல் போய்விட்டதே..." என்று தேமுதிக தொண்டர்களில் ஒரு பிரிவினர் புலம்பி வருகின்றனர்.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close