தி.மு.க.,வில் இணைகிறார் ராஜகண்ணப்பன்?

  Newstm Desk   | Last Modified : 18 Mar, 2019 03:56 pm
rajakannappan-is-planing-to-join-dmk

அ.தி.மு.க., மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ராஜகண்ணப்பன், லோக்சபா தேர்தலில் சீட் கிடைக்காததால், இம்முறை தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதனால், அவர் அந்த கட்சியிலிருந்து விலகி, தி.மு.க.,வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அ.தி.மு.க.,நிறுவனர், எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்தே, அந்த கட்சியின் முக்கிய பாெறுப்பு வகித்து வந்தவர் ராஜகண்ணப்பன். சிவகங்கை மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக விளங்கும் இவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசியாகவும் கருதப்பட்டார். 

2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், சிவகங்கை தொகுதியில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்த்து, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணப்படன், மிகக்குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். 

தேர்தல் முடிவை எதிர்த்து, ராஜகண்ணப்பன் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெயலலிதா தலைமையிலான தமிழக அமைச்சரவையில், அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். அ.தி.மு.க., தலைமையுடனான கருத்து வேறுபாட்டால், சில காலம் தனிக்கட்சி துவங்கி அதை நடத்தி வந்தார். பின், தி.மு.க.,வில் ஐக்கியமாகி, சில காலம் அரசியலில் வலம் வந்தார். 

மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்த கண்ணப்பன், இம்முறை, சிவகங்கை, ராமநாதபுரம் அல்லது மதுரை தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பளிக்கும் படி, கட்சித் தலைமையிடம் விண்ணப்பித்தார். 

ஆனால், சிவகங்கை, ராமநாதபுரம் இரு தொகுதிகளுமே, பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்டன. மதுரையில் சீட் மறுக்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த ராஜகண்ணப்பன், திடீரென தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

இன்று மாலை, சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜகண்ணப்பன், தன் ஆதரவாளர்களுடன் விரைவில் தி.மு.க.,வில் இணைய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close