கொலை மிரட்டல் வழக்கில் கைதாகிறாரா மாஜி அமைச்சர் நயினார் நாகேந்திரன்?

  SRK   | Last Modified : 19 Jan, 2018 09:50 am


ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக இந்து அமைப்புகளும், பாரதிய ஜனதா கட்சியினரும் கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்தியும், கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். 

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் பா.ஜ-வில் சேர்ந்தார். வைரமுத்துவின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ தலைவர்கள் பேசி வரும் நிலையில், சமீபத்தில் நயினார் நாகேந்திரன் வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் 10 லட்ச ரூபாய் தருவேன், என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.  மேலும், இந்துக்களின் மனது புண்படும்படி கருத்து தெரிவிப்பவர்களை கொலை கூட செய்யலாம் என மேடையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்நிலையில், கொலை மிரட்டல் விடுத்ததாக, நயினார் நாகேந்திரன் மீது 6 பிரிவில் நெல்லை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close