'காலா' திரைப்படம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் என்ன சொன்னார் தெரியுமா? 

  சுஜாதா   | Last Modified : 09 Jun, 2018 07:00 am

do-you-know-what-minister-jayakumar-said-about-the-film-kaala

'காலா' திரைப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்திற்கும் அவரது நிஜ வாழ்வின் கொள்கைகளுக்கும் உள்ள முரண்பாடுகள் குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரை பிரேக்கிங் நியூஸ்களின் நாயகனாக இருப்பவர் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். அடிக்கடி தொலைக்காட்சிகளில் ஏதேனும் கருத்தை கூறி சோசியல் மீடியாகளில் ட்ரெண்டிங்கில் இருக்கும் இவரிடம், கடந்த வியாழக்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'காலா' படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் கூறியதாவது: ”நிஜ வாழ்க்கையிலும், திரைப்படங்களிலும் சமூகத்திற்கான கருத்துகளை வலியுறுத்தியவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அதனால் தான் அவரை மக்கள் அங்கீகாரம் செய்து தலைவராக ஏற்றுக்கொண்டு அரியணையிலும் அமர வைத்தனர். ஒரு திரைப்படம் வெற்றி பெறுவது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். மாறாக நான் அதுகுறித்து முடிவெடுக்க முடியாது.

'காலா' திரைப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்திற்கும் அவரது நிஜ வாழ்வின் கொள்கைகளுக்கும் உள்ள முரண்பாடுகள் குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்”, என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close