தொடர் போராட்டங்களால் தமிழகத்தில் நாம் வேலைவாய்ப்பு பறிபோகிறது: தமிழிசை தடாலடி!

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2018 04:19 pm
tamilisai-soundararajan-press-meet-and-speaks-about-tn-protests

தொடர் போராட்டங்களால் தமிழகத்தில் நாம் வேலைவாய்ப்பை இழக்கிறோம் என்பதுதான் உண்மை என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  

இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தூத்துக்குடியில் சமூகவிரோதிகளால் தான் போராட்டம் கலவரமானது என்று கூறினால் பா.ஜ.கவினரை சமூகவிரோதிகள் போல் பார்க்கிறார்கள். சமூக விரோதிகளே இல்லை என்று எவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்? பசுமை வழித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்த அரசியல் கட்சியினர் எதிர்க்கின்றனர். போராட்டம் என்ற பெயரில் தமிழகத்தில் வளர்ச்சியை சிலர் தடுக்கின்றனர்" என்றார். 

கர்நாடகாவில் சுழற்சி முறையில் அமைச்சர் பதவி வழங்குவது குறித்து கேள்வு எழுப்புகையில், "காங்கிரஸ் கட்சியில் பலர் கோபித்து கொண்டு சென்றுள்ளனர் அவர்களுக்கு சுழற்சி முறை பதவி வழங்குவதை வைத்து ஆட்சி நீடிக்காது" என பதிலளித்தார்.

பின்னர், தனி நபருக்கு 15 லட்சம் ரூபாய் வங்கிக்கணக்கில் எப்போது செலுத்தப்படும் என்ற கேள்விக்கு, "இது தவறான புரிதல். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.15 லட்சம் அளவிலான வளர்ச்சி திட்டங்களை அறிவிப்போம் என்று கூறினோமே தவிர பணம் தருவதாக கூறவில்லை" என்றார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close