ஜாக்டோ- ஜியோ போராட்டம்: சட்டப்பேரவையில் தி.மு.க கவன ஈர்ப்பு தீர்மானம்!

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 12:14 pm
dmk-resolution-passed-in-tn-assembly-for-jactto-geo-protest

ஜாக்டோ- ஜியோ போராட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் தி.மு.க இன்று கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. 

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் தொடர் போராட்டம் நடத்திய அவர்கள் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நேற்று போராட்டம்  தொடங்கியதையடுத்து, பல்வேறு மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படுகிறது. 

இன்று சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மாலையில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று போராட்டக்காரர்களை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  "இதுபோன்ற போராட்டங்களை தமிழக அரசு எப்போதும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். தி.மு.க ஆட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்" என்றார். 

பின்னர் சட்டப்பேரவையில் ஜாக்டோ -ஜியோ போராட்டம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். மேலும், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை முதலமைச்சர் அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். 

பின்னர் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்துச் பேச முதல்வர் முன்வராததைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு செய்தது. அத்துடன் தோழமை கட்சிகளான காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகளும் வெளியேறின. 

தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், "மக்களின் நலன் கருதி அனைவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close