கலைஞர் டிவியில் மேலும், ரூ.500 கோடி  முதலீடு..! சன் டிவியை முறியடிக்கத் திட்டம்?

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 06:26 pm
kalaignar-tv-invests-500-crores-on-a-bid-to-beat-sun-tv

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த கலைஞர் தொலைக்காட்சியை  வலுப்படுத்தும் நோக்கில் மேலும் ரூ 500 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

சன் தொலைக்காட்சியை பக்கபலமாக நம்பிக்கொண்டிருந்தது தி.மு.க தலைமை. அதனால்தான் சன் தொலைக்காட்சி குழுமத்தின் சேனல்கள் தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவிவாலயத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்நிலையில், சன் தொலைக்காட்சி குழுமத்தை சேர்ந்த மாறன் சகோதரர்களுடன் திமுக, தலிவர் கருணாநிதி குடும்பத்தினர் இடையியே பிணக்கு ஏற்பட்டது. மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு, ஊழியர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரச்னை பெரிதானது. இதனால், தங்களது கட்சிக்கு என தனியாக ஒரு தொலைக்காட்சியை தொடங்க திட்டமிட்ட கருணாநிதி குடும்பத்தினர், கலைஞர் பெயரில் செப்டம்பர் 2007ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளான 15ம் தேதி புதிய தொலைக் காட்சியைத் தொடங்கினர்.

பெரும் முதலீட்டைக் கொண்டு நிறுவப்பட்ட இந்த தொலைக்காட்சி ஆரம்பத்தில் சன் டிவிக்கு போட்டியாக விஸ்வரூபம் எடுத்து இயக்கி வந்தது. சன் டி.வி-யில் பணியாற்றிய பலரும் கலைஞர் டி.வி-க்கு தாவினர். ஆனால், இடையில் சில வழக்கு, நிர்வாகம் என சில சிக்கல்களை சந்தித்து, டி.ஆர்பி ரேட்டிங்கில் பின்னடைவைச் சந்தித்தது. ஸ்பெட்க்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதற்காக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் கலைஞர் டிவிக்கு ரூ.214 கோடி கொடுத்த பண பரிவர்த்தனையில் அன்னிய  செலாவணி மோசடி நடைபெற்றதாக அமலாக்கப் பிரிவும் வழக்கு தொடர்ந்தது. இதுவும் கலைஞர் டிவிக்கு பெரும் சோதனையை ஏற்படுத்தியது. 

அதன் பிறகு, கலைஞர் டிவி தனி நிறுவனமாக தொடர்ந்து டி.ஆர்.பி ரேட்டிங்கில் 5, அல்லது 6வது இடத்தை பிடித்து வந்தது. இசையருவி, கலைஞர் செய்திகள், சிரிப்பொலி, கலைஞர் ஏசியா, சித்திரம் டிவி என சேனல்கள் கலைஞர் டிவி நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்தன. மாறன் சகோதரர்கள்  குடும்பத்தாருடன் கலைஞர் குடும்பத்தருக்கு சமரசம் ஏற்பட்டுவிட்டபோதும் தங்களது செய்திகளை முன்பைப்போல அல்லாது முழுமையாக சன் டிவி தரப்பு ஒளிபரப்பாமல் இருப்பதாக திமுகவினர் வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் வழக்கும் நடைபெற்று வந்ததால் கலைஞர் தொலைக்காட்சியில் மேலும் முதலீடு செய்ய இயலாமல் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் அந்த வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் வந்த தீர்ப்பில் விடுதலை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மேலும் 500 கோடி ரூபாய் முதலீட்டில் கலைஞர் டிவியை விரிவாக்கம் செய்யும் பணியில் நிர்வாகம் களமிறங்கி இருக்கிறது. இதற்காக தமிழகத்தின் முன்னணி வார இதழில் செய்திப்பிரிவில்  தலைமைப் பொறுப்பில் பணியாற்றி வந்த பலரும் கலைஞர் தொலைக்காட்சியில் இணைந்து பணியாற்ற சம்மதித்துள்ளதாகவும், அதில் சிலர் ஏற்கெனவே கலைஞர் தொலைக்காட்சியில் இணைந்து  பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் புதிய மாற்றங்களுடன் கலைஞர் டி.வி புதிய பரிமாணத்தில் வரப்போவதாக தொலைக்காட்சி ஊழியர்கள் பேசி வருகின்றனர். 

- திரவியராஜ், கட்டுரையாளர்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close