• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

ரஜினிக்கு இவர்... கமலுக்கு அவரா? அசைக்க முடியாத அரசியல் பின்புலம்!

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 01:28 pm

kamal-rajini-s-unwavering-political-background

ஜெயலலிதா மறைவும், கலைஞரின் உடல்நலக் குறைவும் பலரையும் அரசியல் களத்தை நோக்கி இழுத்து வந்து விட்டது. குறைப்பாக அரசியலுக்கு அதோ வருகிறேன், இதோ வருகிறேன் என 20 ஆண்டுகளாக போக்குக்காட்டிக் கொண்டிருந்த ரஜினியும், அரசியல் பற்றிய நோக்கமே இல்லாதது போல் காட்டிக்கொண்டிருந்த கமலும் ஒரே நேரத்தில் தமிழக அரசியலில் களம் கண்டு பிரதான கட்சியினரை தெறிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரஜினியை, பாஜக பின்னிருந்து இயக்குவதாகவும்; கமலை, திமுக இயக்குவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், ரஜினியையும், கமலையும் பொருளாதாரப் பின்னணியில் இருந்து இயக்குவதும், ஆலோசனை கூறுவதும் என இருவருக்கும் அசைக்க முடியாத முக்கிய புள்ளிகள் இருவர் இருந்து வருகின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ரஜினிக்கு ஆலோசனை கூறுவதும் பின்னின்று இயக்குவதும் புதிய நீதிக்கட்சியின் நிறுவனரும், டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக நிறுவனரும், வேந்தருமான ஏ.சி.சண்முகம் என்பது அரசியல் அறிந்த அனைவருக்கும் ஓரளவு தெரிந்திருக்கும். ரஜினி முதன்முதலில் வெளியே வந்து மேடையேறி அரசியல் பேசியது ஏ.சி.சண்முகத்துக்கு சொந்தமான  பூந்தமல்லி அருகே வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தான். அங்கு எம்.ஜி.ஆரின் வெண்கல சிலையை திறந்து வைத்து "தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது. எம்.ஜி.ஆர். விட்டுச்சென்ற ஆட்சியை என்னால்தான் தர முடியும்" என தனது அரசியல் நிலைப்பாட்டை ரஜினி, பளிச்சென  உணர்த்தியது அந்த மேடையில்தான். அந்த விழா எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்பதை விட, ரஜினியின் அரசியலுக்கான அறிமுக மேடை என்பதையே அதிகம் உணர்த்தியது. 

அந்த விழாவுக்கும் முன்பும், பிறகும் தற்போது வரை ரஜினியை நேரில் சந்தித்து மணிக்கணக்கில் அரசியல் ஆலோசனைகளை வழங்கி வருகிறார் ஏ.சி.எஸ்.சண்முகம். ரஜினியின் தூத்துக்குடி விசிட் வரை வரையறுத்துத் தந்தது ஏ.சி.சண்முகம்தான் என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள். ரஜினிக்கும், ஏ.சி.சண்முகத்திற்கும் இருக்கும் நெருக்கம் பொதுவாக அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரியாத ரகசியம் இல்லை. ஏனெனில் ஏ.சி.சண்முகமே "ரஜினியின் அரசியலுக்கு பாதுகாவலனாக, தொண்டனாக இருப்பேன்" என மீடியாக்களிடம் பலமுறை வெளிப்படையாகவே தெரிவித்து இருக்கிறார்.

ஆனால், கமலை பின்னிருந்து இயக்குவது யார் தெரியுமா? ஹச்.சி.எல் நிறுவனரும், தலைவருமான ஷிவ் நாடார் என்கிறார்கள் கமலுக்கு நெருக்கமானவர்கள். நாடார் இனத்தை சேர்ந்த ஷிவ் நாடார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். இந்திய அளவில் ஐந்தாவது பணக்காரர். கடந்த ஆண்டு மட்டும் 630 கோடி ரூபாயை தனது அறக்கட்டளை மூலம் தொண்டு பணிகளுக்கு செலவிட்டுள்ளார். இப்படி தாராள மனம் கொண்ட ஷிவ்நாடார் தனது இனத்தின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர். கமல் அரசியல் எண்ட்ரியை அறிவித்த சில தினங்களில் மாணவர்களிடையே சென்னை அருகே மகாபலிபுரம் ரோட்டில் அமைந்துள்ள எஸ்.எஸ்.என் கல்லூரியில் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மாணவர்களிடையே உரையாடினார் அல்லவா? அந்த எஸ்.எஸ்.என் கல்லூரி ஷிவ் நாடாருக்கு சொந்தமானது. ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் கல்லூரி என்பதன் சுருக்கம்தான் எஸ்.எஸ்.என் கல்லூரி.

கமல் அரசியலுக்கு ஷிவ்நாடார் உதவ காரணம் என்ன? "எப்போதும் தனது சமூக மக்களின் பாதுகாப்பு முக்கியம் எனக் கருதுபவர் ஷிவ்நாடார். காமராஜருக்கு பிறகு தற்போதைய அரசியலில் நாடார் இனத்திற்கு உரிய வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. கடந்த பல ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. அந்த இரு கட்சியிலும், கவுண்டர், முக்குலத்தோர் ஆகிய இரு சாதியினருக்கு மட்டுமே அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இனி வரும் காலங்களிலாவது தனது இன மக்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என ஷிவ் நாடார் நினைக்கிறார். அந்த மாற்றம் கமல் மூலம் நடக்கும் என்கிற நம்பிக்கையில் அவருக்கு அனைத்து விஷயங்களிலும் பக்கபலமாக ஷிவ் நாடார் இருந்து வருகிறார்" என்கிறார்கள் கமல்ஹாசன் ஆதரவாளர்கள்.  

இப்போது வரை எந்த முடிவு எடுத்தாலும் ஷிவ் நாடாரை கலந்தாலோசித்த பிறகு கமல்ஹாசன் அரசியல் முடிவுகளை எடுப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். 16 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவில் இடம்பெற்றிருந்த வழக்கறிஞர் ராஜசேகரன் திடீரென சில மாதங்களுக்கு முன் விலகினார். அவர்தான், பல உயரதிகாரிகளியும், தொல்ழிபதிபர்களையும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைய வைக்க முக்கியக் காரணமாக இருந்தவர். உயர்மட்டக் குழுவில் இருந்தவர்களிலேயே மிகவும் ஆக்டிவ் ஆனவர். கட்சியில் இருப்பதால் வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்ள முடியவில்லை என்கிற காரணத்தை சொல்லி தனது பதவியை விட்டு வெளியேறினார். 

ஆனால், அவர் விலகியதற்கு காரணம் அதுவல்ல என்கிறார்கள். ஷிவ் நாடாரின் தலையீடுதான் ராஜசேகரன் விலகியதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் அக்கட்சியில் உள்ளவர்கள்.

ஆக மொத்தத்தில் ரஜினி, கமல் இருவரின் அரசியல் பின்புலமும் அசைக்க முடியாத உச்சத்தில்தான் இருக்கிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close