தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் யார் யார்?

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2018 11:19 am
dinakaran-supported-18-mlas-list

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிப்பதை வாபஸ் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் கடந்த ஆண்டு ஆளுநரிடம் மனு அளித்தனர். அதன்படி, அந்த 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. விசாரணை முழுவதுமாக முடிவடைந்த நிலையில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று பகல் 1 மணிக்கு தீர்ப்பு வழங்க இருக்கிறது.  இந்த வழக்கில் தொடர்புடைய அந்த 18 எம்.எல்.ஏக்கள் யார் என்பதை பார்க்கலாம்...

1. டி.ஏ.ஏழுமலை - பூந்தமல்லி

2. பி.வெற்றிவேல் -பெரம்பூர்

3. என்.ஜி.பார்த்திபன் - சோளிங்கர்

 4. மு.கோதண்டபாணி - திருப்போரூர்

5. சி.ஜெயந்தி பத்மநாபன் - குடியாத்தம்

6. ஆர்.பாலசுப்பிரமணி -ஆம்பூர்

7. பழனியப்பன் -பாப்பிரெட்டிபட்டி

8. ஆர்.முருகன் -அரூர்

9. ஆர்.தங்கதுரை -நிலக்கோட்டை

10. செந்தில்பாலாஜி -அரவக்குறிச்சி

11. எம்.ரெங்கசாமி -தஞ்சாவூர்

12. சோ.மாரியப்பன் கென்னடி -மானாமதுரை  

13. தங்கதமிழ்செல்வன் -ஆண்டிபட்டி

14. கா.கதிர்காமு -பெரியகுளம்

15. எஸ்.ஜி.சுப்பிரமணியன் -சாத்தூர்

16. எஸ்.முத்தையா -பரமக்குடி

17. கு.உமா மகேஸ்வரி - விளாத்திக்குளம்

18. ஆர்.சுந்தர்ராஜ் -ஒட்டப்பிடாரம்

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close