தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்கலாம், புஷ்வாணமாகவும் இருக்கலாம் - தமிழிசை

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2018 12:15 pm
tamilisai-soundararajan-says-his-opinion-about-mlas-disqualification-case

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு அரசியலில் அணுகுண்டாக மாறப் போகிறதா? அல்லது புஷ்வாணமாக இருக்கப் போகிறதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

தமிழகமே பரபரப்பாக இந்த தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்ற 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்று பகல்1 மணிக்கு வெளியாக இருக்கிறது.  இந்நிலையில் இந்த வழக்கு குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். 

இன்று திருப்பூரில் மத்திய அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உதவி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு, கோவை விமான நிலையத்திற்கு திரும்பிய தமிழிசையிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "தமிழகமே பரபரப்பாக எதிர்பார்த்துக்கொண்டிருப்பது இன்று மதியம் 1 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வர இருக்கும் தீர்ப்பை தான். 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான தீர்ப்பை பொறுத்து தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படலாம்அது அணுகுண்டாக வெடிக்கவும் செய்யலாம், புஷ்வாணமாக போகவும் செய்யலாம். தீர்ப்பு எப்படி வருகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்" என பதிலளித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close