தீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் அல்ல: டிடிவி தினகரன்

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2018 04:12 pm
there-is-no-drawback-for-today-s-verdict-says-ttv-dinakaran

தகுதி நீக்க வழக்கின் இன்றைய தீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் அல்ல என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதி சுந்தர் மற்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகிய இருவரும் முரண்பட்ட தீர்ப்புகளை வாசித்ததால் வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. 3வது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்ற தீர்ப்பும், எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கமும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தீர்ப்பு குறித்து தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "என்னுடன் இருக்கும் எம்.எல்.ஏக்கள் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுள்ளனர்.  சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் ஒன்றாகத் தான் இருப்போம். நாங்கள் 21 பேரும் ஒன்றாகத்தான் உள்ளோம். எங்களுக்குள் எந்த பிரிவும் இருக்காது. இவர்கள் சொத்துக்காக என்னுடன் இல்லை. கட்சி மீது கொண்ட பற்றால் இருக்கிறார்கள். 

தீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் அல்ல. ஆனால் புதுச்சேரி சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பும், தமிழக சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சபாநாயகர் உத்தரவில் தலையிடக்கூடாது என்று கூறிய அதே நீதிபதி புதுச்சேரி சபாநாயகர் உத்தரவில் தலையிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனை அவர் எவ்வாறு மறுக்க முடியும்? ஆனால் நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என சரியாக கூறியுள்ளார். தற்போது வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். தலைமை நீதிபதி மூலமாக தற்போதைய அ.தி.மு.க அரசாங்கத்தின் ஆயுள் சிறிது காலம் நீடித்துள்ளது. மக்கள் விரோத அ.தி.மு.க அரசுக்கு நீதிமன்றம் ஆயுளை கொடுத்துள்ளதுநீதிமன்றத்தில் மேல் உள்ள நம்பிக்கையில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close