• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பின் பின்னணியில் மோடி?: திருநாவுக்கரசர் சந்தேகம்

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 14 Jun, 2018 06:33 pm

modi-behind-the-verdict-congress-leader-thirunavukarasar

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் பின்னணியில் பிரதமர் மோடி இருந்திருக்கக்கூடாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்து உள்ளார்.
டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் தீர்ப்பு வழங்கினர். இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் 3வது நீதிபதி வழக்கு ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க இன்னும் மூன்று மாதங்கள் ஆகலாம் என்பதால் எந்த சிக்கலும் இல்லாமல் எடப்பாடி அரசு தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர்,  "இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது குறித்து நான் எந்த வித கருத்தையும், விமர்சனத்தையும் பதிவு செய்ய விரும்பவில்லை. மூன்றாவது நீதிபதி இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பை வழங்க உள்ள நிலையில், தீர்ப்பின் பின்னணியில் பிரதமர் மோடியின் தலையீடு இருந்திருக்கக்கூடாது என பிரார்த்திக்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். 
மோடியின் ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருவதாக பரவலாக பேசப்படும் நிலையில், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் அதையே மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close