டென்ஷனாக்கிய தனுஷ்... கோபத்தில் ரஜினி..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 16 Jun, 2018 11:27 pm
dhanush-tenson-rajini-in-anger

தனுஷின் செயல்பாடுகளால் ரஜினி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. 

அப்படி என்ன செய்துவிட்டார் தனுஷ்..? 

காலா படம் ஆரம்பிப்பதற்கு முன்பாக ஒரு நாள் தன் அப்பாவிடம் மனம் விட்டு பேசிய ஐஸ்வர்யா தனுஷ், “அப்பா… தனுஷுக்கு நிறைய கடன். கிட்டதட்ட நாற்பது கோடி. நீங்க கால்ஷீட் கொடுத்தால் அவர் ஒரேயடியாக எல்லா கடன்களையும் அடைத்துவிட்டு நிம்மதியாகிடுவார்” என்று கூறியிருக்கிறார். 

“அதற்கென்ன… ஆகட்டும்” என்று சம்மதித்தாராம் ரஜினி.  ஆனால் தனக்கான சம்பளத்தை விட்டுக் கொடுப்பதாக இல்லை. சுமார் ஐம்பது கோடியை தனது சம்பளமாக நிர்ணயித்து படத்தை ஆரம்பிக்கச் சொல்லியிருக்கிறார் ரஜினி. சொல்வதை கேட்கிற, சம்பளமாக என்ன தருகிறார்களோ, அதை வாங்கிக் கொள்கிற, அதைவிட கட்சி துவங்குகிற நேரத்தில் ஜாதிய ரீதியாக சப்போர்ட் தருகிற இயக்குனர் என்று முக்கால பூஜைக்கு தற்கால நிவாரணமாக கண்முன் வந்தவர் பா.ரஞ்சித். தடதடவென காரியத்தில் இறங்கிவிட்டார் தனுஷ்.

 
எல்லாம் நன்றாக முடிய படம் ரிலீஸ் ஆகும்போதுதான் பிரச்னை பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது. இந்தப்படத்திற்கு ‘இணைத் தயாரிப்பு’ என்று ஐஸ்வர்யாவின் பெயரை டைட்டிலில் போடுவார் என்று எதிர்பார்த்தாராம் ரஜினி. அது நடக்கவில்லை என்பது ரஜினிக்கு வருத்தம்.  இது குறித்து தனுஷிடம் பேசியபோதும் அவர் கண்டு கொள்ளவில்லையாம். அதுமட்டுமல்ல… தாணு கபாலிக்கு விளம்பரம் செய்தது போல  காலா படத்திற்கு  தனுஷ் பெரிய அளவில் விளம்பரம் செய்வார் என்று எதிர்பார்த்தால், அதுவும் நடக்கவில்லை. கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத தனுஷ் மீது ஏகப்பட்ட கோபம். காலா படத்தில் ரஜியுடன் ஒரு சொஇனிலாவது நடித்துவிட வேண்டும் என்கிற ஆசையை இயக்குநர் ரஞ்சித்திடம் தெரிவித்தாராம் தனுஷ். அதை ரஞ்சித், ரஜினியிடம் கூற, ‘’அதெல்லாம் வேண்டாம். இந்தப்படத்திற்கு அவர் தயாரிப்பாளராக இருந்தால் மட்டும் போதும்’ என ரஜினி மறுத்துவிட்டாராம். 

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பாரதிராஜா உள்ளிட்ட பலரும் விமர்சித்து வந்தனர். காலா வெளியீட்டு விழாவில் இதற்கு பதிலளித்துப்பேசிய தனுஷ் ‘சிலர் கடுமையாக உழைத்து உச்சத்திற்கு வருகிறார்கள். ஆனால் உச்சத்தில் இருப்பவர்களை விமர்சித்தால் உச்சத்திற்கு வரலாம் என சிலர் நினைக்கிறார்கள். ரஜினியால் வாழ்ந்தவர்கள், அவரால் சம்பாதித்தவர்களே அவர் குறித்து விமர்சனம் செய்து வருகிறார்கள்’ கடுமையாக தாக்கி பேசியிருந்தார். இதனை ரஜினி ரசிக்கவில்லையாம்.

அதேபோல், 40 ஆண்டுகளாக ரஜினி சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். ஒரே சூப்பர் ஸ்டார்தான். அவர் இடத்தை யாரும் பிடிக்க முடியாது. யாரும் சூப்பர் ஸ்டார் ஆக முடியாது’ மற்றொரு நிகழ்வின்போது பேசியிருந்தார். இதுவும் திரையுலகினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. 

’’தான் அரசியலுக்கு வரும் சூழலில், இந்தப்பேச்சுக்கள் எல்லாம் மற்றவர்களை காயப்படுத்தும். தன்னைப்பற்றியோ, தனது அரசியல் பற்றியோ, தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பொதுவெளியில் வாய் திறக்க வேண்டாம். அது எனக்கு பின்னடைவாக மாறிவிடும்’’ என தனது குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டுள்ளாராம் ரஜினி. ஆகவே தனுஷை அழைத்து இதுபோன்ற செயல்களை நிறுத்தி விட்டு உங்களது படப்பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். என்னைப்பற்றிய விமர்சனம், தாக்குதல்களுக்கு நானே பதில் சொல்லிக்கொள்கிறேன்’’ என வெளிப்படையாகவே சொல்லி விட்டாராம் ரஜினி. 

இதனால் அப்செட்டாகி கிடக்கிறார் தனுஷ்..! 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close