எம்.பி பதவி... தமிழக தலித் தலைவர்களை வளைக்கும் பாஜக!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 17 Jun, 2018 04:33 pm
mp-post-will-bend-the-dalit-leaders-of-tamil-nadu

தமிழகத்தில் எந்த வகையிலாவது காலூன்றி விடவேண்டும் எனத்துடிக்கிற பா.ஜ.க தற்போது தலித் தலைவர்களை வளைக்கும் அஸ்திரத்தை எடுத்திருக்கிறது. 

மாட்டுக்கறி விவகாரம், தலித் சமுதாய மாணவர்கள் ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன் ஆகியோரது தற்கொலை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளால் தலித் சமுதாய மக்களுக்கு விரோதமான அரசு என்கிற அவப்பெயரை பெற்று இருக்கிறது பாஜக. இந்த கலங்கத்தை துடைக்க தற்போது பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிறக்கிறது பாஜக தலைமை. அதன் ஒரு பகுதிதான் தலித் ஓட்டுகளை இழுக்கும் முயற்சி. அந்த வகையில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுகிறதலித் கட்சிகளின் தலைவர்களுக்கு, உ.பி., ராஜஸ்தான், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், ராஜ்யசப எம்.பி., பதவிகளை அளித்து அவர்களை அனுசரித்து வருகிறது.

அந்த வகையில, தமிழகத்துக்கும் ஒரு, எம்.பி., பதவி வழங்க முடிவு பண்ணியிருக்கிறது பாஜக டெல்லி மேலிடம். இதில், தென் மாவட்டத்தைச் சேர்ந்த, தேவேந்திர குல வேளாளர் சமுதாய தலைவர் கிருஷ்ணசாமி, ஓய்வு பெற்ற பெண், ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி, அருந்ததியர் சமுதாய தலைவர் வலசை ரவிச்சந்திரன் ஆகிய மூவரில் ஒருவருக்கு ஜாக்பாட் அடிக்கப்போவதாக கூறப்படுகிறது. 

இதில் டாக்டர் கிருஷ்ணசாமி 5 முறை தென்காசி தொகுயில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட்டு ஒருமுறைகூட வெற்றியை பெறவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க கூட்டணியில் களமிறங்கி தோல்வியடைந்தார். சமீபகாலமாக நீட் விவகாரம், தொடங்கி பாஜகவுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதனால், இந்த மூவரில் கிருஷ்ணசாமிக்க எம்.பி பதவி கிடைக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2009 முதல் முழுநேர அரசியலில் ஈடுபட்டர் சிவகாமி. பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து கட்சிப்பணியை தொடங்கி திமுக ஆதரவுடன் கடந்த 2009ம் ஆண்டு நடாளுமன்ற வேட்பாளராக களமிறங்கி தோல்வியை தழுவினார். பிறகு சமூக சமத்துவ படை அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகிறார். 

அதிமுகவில் தம்மை இணைத்துக்கொண்ட அருந்ததியர் சமுதாய தலைவர் வலசை ரவிச்சந்திரன் கடந்த ஆண்டு அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். மீண்டும் அருந்ததி மக்கள் கட்சியை தொடங்கி செயல்பட்டு வருகிறார். இந்த மூவரில் எம்.பி பதவியை யாருக்கு வழங்குவது என தமிழக பாஜக தலைவர்களிடம் கருத்து கேட்டுவருகிறது டெல்லி தலைமை.  யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறதோ...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close