எதிராக வெற்றிவேல்... புதிராக தங்க தமிழ்செல்வன்... குழப்பத்தில் டி.டி.வி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 20 Jun, 2018 02:03 pm
thanga-tamilselvan-vetrivel-against-ttv-dhinakaran-in-confusion

தினகரன் அணியில் உள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் பலரும் என்ன முடிவெடுப்பது எனப் புரியாமல் தவித்து வருகின்றனர். ஆனால், இருவர் மட்டும் தங்களது முடிவில் ஏறுக்குமாறாக தெளிவாக இருக்கின்றனர். ஒருவர் தங்க  தங்க தமிழ் செல்வன், மற்றொருவர் வெற்றிவேல்.

இந்த இருவரும் தினகரனுக்கு இரண்டு கரங்களாக செயல்பட்டு வந்தவர்கள். இருவரும் தினகரன் அணியில் ஏட்டிக்குபோட்டியாக செயல்பட்டு வருவது மற்றவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. 

தகுதி நீக்கம் வழக்கை வாபஸ் தொடர்பாக, சட்ட நிபுணர்கள் சிலரிடம் தங்க தமிழ்ச்செல்வன் ஆலோசித்து இருக்கிறார். ‘‘வழக்கை வாபஸ் பெற்றாலும், இப்போதுள்ள சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடியும் வரை நீங்கள் ஏற்கெனவே ஜெயித்த தொகுதியில் மீண்டும் போட்டியிட முடியாது. ஒருவேளை போட்டியிட்டால், அதை எதிர்த்து யாராவது நீதிமன்றம் செல்லமுடியும். அந்த வழக்கும் இழுக்கும். எனவே, வேறு ஒருவரைத்தான் ஆண்டிபட்டியில் நிறுத்தவேண்டி வரும்’’ என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். தான் நிற்க முடியாத பட்சத்தில் தன்னுடைய குடும்பத்தில் ஒருவரை வேட்பாளராக்கலாமா என யோசித்து வருகிறாராம் தங்க தமிழ்ச்செல்வன்.  

இவர் இப்படி என்றால், தினகரனின் வலதுகரமான பெரம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ வெற்றிவேல், ‘‘வழக்கை வாபஸ் வாங்குவது என்கிற பேச்சுக்கே இடமில்லை. அப்படிச் செய்தால், சபாநாயகர் அவரது வானளாவிய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜெயித்துவிட்டார் என்று ஊர்ஜிதமாகிவிடும். சபாநாயகரின் தீர்ப்பு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். எக்காரணம் கொண்டும் சபாநாயகரை ஜெயிக்கவிடக் கூடாது. நீதிமன்றத்தில் ஜெயித்த பிறகு சட்டசபைக்குள் வெற்றிகரமாக நுழையவேண்டும் என்று காத்திருக்கிறேன்’’ என்கிறார் நம்பிக்கையாக.
ஆக, 18 எம்.எல்.ஏ-க்களில் யார் யார் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிய முடியாமல் குழப்பத்தில் தவித்து வருகிறாராம் டி.டி.வி.தினகரன்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close