தமிழகத்தில் தீவிரவாதிகள் அதிகம் ஊடுருவல்: பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2018 05:41 pm
central-minister-pon-radhakrishnan-warns-tn-govt

தமிழகத்தில் அதிகமாக ஊடுருவி வரும் பயங்கரவாதிகளை ஒடுக்க அரசு சர்வ அதிகாரத்தையும் பயன்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "தீவிரவாத அமைப்புகள் தமிழகத்தில் அதிகமாக ஊடுருவி வருகிறார்கள் என நான் ஏற்கனவே கூறியுள்ளேன். நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் என பிரிவினைவாதத்தை தூண்டும் பல்வேறு அமைப்புகள் தமிழ்நாட்டில் ஊடுருவி பயிற்சி பெற்று வருகின்றனர். இதனால் ஏற்பஉடம்  ஏற்படும் விளைவை தான் தமிழகம் சந்தித்து வருகிறது. இப்போதே இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், தமிழகம் பேரழிவை சந்திக்க நேரிடும். ஒரு போராட்டம் சாதாரணமானதா? இல்லை அதன் பின்னால் வேறு ஏதேனும் அமைப்பு உள்ளதா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். தமிழகத்தில் அதிகரித்து வரும் பயங்கரவாதிகளை ஒடுக்க அரசு சர்வ அதிகாரத்தையும் பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டால் எம்.ஜி.ஆருக்கு செய்யும் துரோகம். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தவுடன் நக்சல்களை விரட்டினார். அதேபோன்று போலீசாருக்கு முழுசுதந்திரம் கொடுக்க வேண்டும்" என்றார்.


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close