தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 1700 பேர் மீதான வழக்கு ரத்து!

  Newstm Desk   | Last Modified : 21 Jun, 2018 12:41 pm
thoothukudi-riot-case-withdrawls-against-1700-people-who-are-participate-in-communist-party-meeting-in-tuticorin

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற 1700 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ததை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. 

தூத்துக்குடியில் கடந்த மே 22ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிவுற்றது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இதற்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா, பல்வேறு உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக போராட்டத்தினை முன்னெடுத்தனர். 

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்த அந்த சமயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிருந்தா காரத் தலைமையிலான பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. தடை உத்தரவை மீறி இந்த கூட்டத்தில் பங்கேற்ற 1700 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கில் 1700 பேர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு காவல்துறைக்கு  சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close