ராகுல்-கமல் சந்திப்பு: திமுக கூட்டணியில் குழப்பமா?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 22 Jun, 2018 01:09 pm
rahul-kamal-meets-with-dmk-alliance-confused

ராகுல் காந்தி- கமல்ஹாசன் சந்திப்பால் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியால் கூட்டணிக்கு பெரிய பலன் இல்லை என்றும், காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை விட்டுத்தர வேண்டிய நிலை உள்ளதால் தங்களுக்குக் கிடைக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதாகவும் ஏற்கனவே தி.மு.க தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 41 தொகுதிகள் ஒதுக்கியது. ஆனால் காங்கிரஸ் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த தொகுதிகளில் தி.மு.க போட்டியிட்டிருந்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்பட்டது

எனவே காங்கிரஸ் கட்சியை தி.மு.க கூட்டணியில் இருந்து எப்போது வேண்டுமானாலும் கழட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் இந்த நேரத்தில் திடீரென கமல்ஹாசன், காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து இருப்பது கூட்டணிக்கு அஸ்திவாரமாக அமையும் எனக்கூறப்படுகிறது.

எனவே தி.மு.க, கூட்டணியில் இருந்து விலக்கினால் தனித்து விடப்படுவோம் என்ற பயத்தில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு கமல் சந்திப்பு ஒரு துடுப்பு போன்று ஆறுதலை தந்துள்ளதாக கூறுகிறார்கள். 

இந்த நிமிடம் வரையில் இந்தக் கூட்டணியை ஸ்டாலின் இறுதி செய்யவில்லை என்பதும் ராகுல் மனதில் பல கேள்விகளை எழுப்பி வந்தது. `` மூன்றாவது அணியை முன்னெடுக்கும் மம்தா, சந்திரசேகர ராவ் பக்கம் ஸ்டாலின் கவனத்தைச் செலுத்துவதால், `நாம் ஏதாவது ஒரு முடிவை எடுத்தாக வேண்டும்' என்ற மனநிலையில் இருக்கிறாராம் ராகுல்காந்தி.  இந்த நிலையில் கமல் சந்திப்பு ராகுலுக்கு மாற்று யோசனையை தந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கருதுகின்றனர். ஏற்கனவே, தினகரனுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது.

வரும் தேர்தலில் காங்கிரஸ், கமல் கட்சியுடன் இன்னும் சில கட்சிகள் கூட்டணி சேர்ந்தால் அது தி.மு.க கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close