அருணா ஜெகதீசன் விசாரணைக்கு தடையில்லை - மதுரைக்கிளை

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2018 01:30 pm
there-is-no-objection-for-investigating-by-aruna-jegadeesan-in-thoothukudi-gunfire-says-madurai-hc

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்திற்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள், போராட்டங்கள் வெடித்தன. துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

அதன்படி, நீதிபதி அருணா ஜெகதீசன் தூத்துக்குடியில் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் அவரது விசாரணைக்கு  தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இன்றைக்கு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், நீதிபதி, "தூத்துக்குடி சம்பவம் குறித்து விசாரிக்கும் ஆணையம் முறையான விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டதா? விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் ஜூன் 20ம் தேதிக்குள் பதில் தர வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close