ஒரு தென்னை மரத்துக்கு ரூ.50,000 விலை: சேலம் ஆட்சியர் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2018 01:40 pm
collector-rohini-explains-about-salem-chennai-highway-project

பசுமைவழிச்சாலை திட்டத்தில் கையகப்படுத்தும் நிலத்திற்கு வழங்கப்படும் இழப்பீடு குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி இன்று விளக்கமளித்தார். 

சேலம் - சென்னை இடையே 277 கிமீ தொலைவுக்கு ரூ. 10,000 கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் ஏராளமான விவசாய நிலங்கள் தமிழக அரசால் கையப்படுத்தப்பட உள்ளதால் பொதுமக்கள் இந்த திட்டத்தினை எதிர்த்து பொதுமக்கள், சமூக நல அமைப்புகள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசோ இத்திட்டத்தினை செயல்படுத்த தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சாலை அமைப்பதற்கான நில அளவீடு பணிகள் கடந்த 18ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், கையகப்படுத்தும் நிலத்திற்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும் என்பது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் ரோஹிணி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர், "சேலத்தில் பசுமைவழிச்சாலை 38 கி.மீ தூரத்திற்கு வரவுள்ளது. நில கையகப்படுத்தும் சட்டத்தின்படி, இதில் உள்ளடங்கும் நிலங்களுக்கு மட்டுமின்றி, கிணறு மற்றும் மரங்களுக்கும் இழப்பீடு தரப்படும். ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 21.5 லட்சம் மற்றும் அதிகபட்சமாக ரூ. 9.04 கோடி வரையில் வழங்கப்படும். 

 ஒரு முதிர்ச்சி அடைந்த தென்னை மரத்திற்கு ரூ.50,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரூ.40,000 மாக இருந்த இதன்விலை தற்போது  ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் தென்னை மரங்கள் இருந்தால் நிலத்திற்கு, தென்னை மரத்திற்கு என அனைத்திற்கும் இழப்பீடு கொடுக்கப்படும். 

நிலத்தில் உள்ள நீர் ஆதாரங்களான கிணறு உள்ளிட்டவற்றுக்கும் இழப்பீடு வழங்கப்படும். இதில் மொத்தம் 853 பட்டாதாரர்கள் உள்ளனர். ,மேலும் இலவச வீட்டுமனை பட்டா திட்டத்தின் கீழ் அவர்களுக்கு நிலங்கள் வழங்கப்படும். அரசு திட்டத்தின் கீழ் பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். கடைகள், சிறிய தொழில் செய்யும் நிறுவனங்கள் போன்று இருந்தால் பொருட்களை  இடமாற்றம் செய்ய ரூ.50,000 வழங்கப்படும். எனவே விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இந்த திட்டத்தினால் எந்த பாதிப்பும் இருக்காது. 

மேலும், திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் யாரும் போராட்டம் நடத்தவில்லை.  நிலத்திற்கு வழங்கும் இழப்பீடு தொகை குறித்து  அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளனர். அந்த சமயத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close