பி.இ.கவுன்சிலிங்: ரேங்க் லிஸ்ட் ஜூன் 28ம் தேதி வெளியீடு!

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2018 02:02 pm
be-counselling-rank-list-will-be-announce-on-june-28-says-anna-university

பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசைப்பட்டியல்  ஜூன் 28ம் தேதி வெளியாகும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இந்த ஆண்டு ஆன்லைனில் நடைபெற உள்ளது. கடந்த ஜூன் 2ம் தேதி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், பொறியியல் படிப்புக்கு 1,59,631 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 5ம் தேதி ரேண்டம்  எண் வெளியிடப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 8ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. தமிழகத்தில் இந்தாண்டு கலந்தாய்வுக்கான மொத்த இடங்கள் 1,78,129 ஆகும். இவற்றில் 509 கல்லூரிகள் பங்கேற்கின்றன. 

இதையடுத்து பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் (Rank List) ஜூன் 28ம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியிடப்படும் என அண்ணா பல்கலைகழகம்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை http://www.tnea.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close