அந்தந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு மையங்கள் - மத்திய அமைச்சர் உறுதி!

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2018 05:03 pm
central-minister-prakash-javadekar-press-meet-in-chennai

வரும் கல்வியாண்டு முதல் அந்தந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய  மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "வரும் கல்வியாண்டு முதல் தமிழக மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். அவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் நிலை வராது. மாநில பாடத்திட்டத்தில் இருந்தும் நீட் தேர்வு வினாக்கள் கேட்கப்படும். வினாத்தாள்களை தமிழில் மொழிபெயர்க்க தமிழ் நன்கு தெரிந்த மொழிபெயர்ப்பாளர்களை தமிழக  அரசு அனுப்ப வேண்டும்" 

பொறியியல் படிப்புக்கு நுழைவுத்தேர்வு கொண்டு வரும் எண்ணமில்லை. தேசிய கல்விக்கொள்கை விரைவில் நாடு முழுவதும் கொண்டுவரப்படும்" என்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close