முதல்வர் பதவிக்காக மு.க.ஸ்டாலின் நடத்திய யாகம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 23 Jun, 2018 01:56 pm

yagaa-conducted-by-mk-stalin-for-chief-minister-s-post

ஸ்ரீரங்கம் வந்த தி.மு.க., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் முதல்வர் பதவி கிடைக்க சுக்ரப்ரீத்தி யாகம் நடத்தியதாக கூறப்படுகிறது. 

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, திருச்சி சென்ற, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், நேற்று காலை ஸ்ரீரங்கத்தில் நடந்த கட்சியினர் இல்ல விழாக்களில் பங்கேற்றார். காரில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் ரெங்கா கோபுரம் சென்றார். அங்கு காரை விட்டு இறங்கிய ஸ்டாலினுக்கு கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, கோவிலில் வைத்து யாகம் செய்த மஞ்சள் சால்வை அணிவித்து ஸ்டாலின் நெற்றியில் சந்தனத்தை, சுந்தர் பட்டர் வைத்தார். அதை ஏற்றுக் கொண்ட ஸ்டாலின் பின், அழித்துவிட்டார். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யானைக்கு ஸ்டாலின் கரும்பு வழங்கினார். அதன் பின் காரில் கோவிலை வலம் வந்து, புறப்பட்டுச் சென்றார். திராவிட கொள்கைகளில் மிகுந்த பிடிப்புடன் இருப்பதாக பேசி வரும் ஸ்டாலின், ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்துக்கு வந்து, பூர்ணகும்ப மரியாதையை ஏற்றுக் கொண்டது, தி.மு.க.,வினர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தி.மு.க., நிர்வாகிகள், ‘’முன்னாள் அமைச்சர் நேரு மூலமாக , கோவிலில் நேற்று சுந்தர் பட்டரால் சுக்ரப்ரீத்தி யாகம் செய்யப்பட்டது. யார் பெயரில் இந்த யாகம் செய்யப்படுகிறதோ, அவர்கள் விரும்பிய பொருள் கைகூடும். எதிரிகள் வெல்லப்படுவர் என்பது ஐதீகம். ஸ்டாலின் விரும்பும் முதல்வர் பதவி கிடைக்கவும், அவருக்கு கட்சிக்குள்ளும், குடும்பத்திலும் உள்ள எதிரிகளை அழிக்கவும், இந்த யாகம் செய்யப்பட்டது’’ எனக்கூறினர்.  கர்நாடகா முதல்வர் குமாரசாமிக்காக, இந்த யாகம் ஏற்கனவே செய்யப்பட்டது.
இந்த நிகழ்வால், திராவிட கொள்கைகளை ஸ்டாலின் காற்றில் பறக்க விட்டதாக தி.மு.க எதிர்தரப்பினர் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.  ஸ்டாலினின் ஸ்ரீரங்கம் வருகை குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close