ரொனால்டோ Vs மெஸ்ஸி போல அ.தி.மு.க Vs தி.மு.க - அமைச்சர் ஜெயக்குமார்

  Newstm Desk   | Last Modified : 26 Jun, 2018 12:31 pm
minister-jayakumars-opinion-about-kamal-s-speech

கால்பந்து போட்டி என்றால் ரொனால்டோ - மெஸ்ஸி என்பது போல், தமிழகத்தில் தேர்தல் என்றால் அ.தி.மு.க - தி.மு.க தான் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இன்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், "ஆளுநர் ஏன் ஆய்வு நடத்துகிறார் என திமுக கேள்வி எழுப்புகிறது. தேவைக்கேற்ப தங்களது கொள்கைகளை மாற்றிக்கொள்வது தி.மு.க தான். சட்டப்பேரவையில் ஆளுநரைப் பற்றி பேசக்கூடாது என 1999ல் தி.மு.க தான் முடிவு எடுத்தது. தற்போது செயல் தலைவர் ஸ்டாலினே சட்டப்பேரவையில் ஆளுநர் ஆய்வு குறித்து கேள்வி எழுப்புகிறார். தற்போதைய நிலையில், மாநில அதிகாரத்தில் தலையிடாமல், அதிகாரத்திற்கு உட்பட்டே ஆளுநர் செயல்பட்டு வருகிறார்" என்றார். 

மேலும், 'தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம்' என்று கமல் கூறியதற்கு, அமைச்சர் ஜெயக்குமார், "கால்பந்து என்றால் ரொனால்டோ - மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் தான் போட்டி இருக்கும். அதுபோல தமிழக தேர்தல், அரசியல் என்றால் அ.தி.மு.க - தி.மு.க இடையேதான் போட்டி. வேறு எந்த கட்சியும் நுழைய முடியாது" என பதிலளித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close