’காலா’ படம் வேஸ்ட்... தேவர் மகன்-2 எடுப்போம் வாங்க’... ரஜினியை கலாய்த்த கமல்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 04 Jul, 2018 05:18 pm

rajini-with-kamal-discussed-kaala-film

காலா படப்பிரச்னை, ரசிகர் மன்ற நிர்வாகிகள் விவகாரம் என ஏகப்பட்ட குழப்பங்களில் இருக்கிறார்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த நிலையில் கமல் கூறிய சில விஷயங்களால் ரஜினி அப்செட்டில் இருக்கிறாராம்.

காலா படம் தனது இமேஜை இன்னொரு படி உயர்த்தும் என நினைத்துக்கொண்டிருந்த ரஜினிகாந்தின் எண்ணத்தில் அரையடி ஆழத்திற்கு மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது அந்த படம். சாதி ரீதியிலான ஒருவரது தனிப்பட்ட கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் சம்மதிக்க ரஜினி எப்படி ஒப்புக்கொண்டார்.  அரசிலில் பிரவேசிக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவாக வசனங்களை பேசி சாதி அரசியலை முன்னெடுக்க முயல்கிறாரா? என்றெல்லாம் விமர்சனங்கள் விண்ணை முட்டின. 

அதிலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சர்ச்சைக் குரிய கருத்து தெரிவித்திருந்தது, காலா படத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இமயமலையில் ஷூட்டிங் நடந்து வருகிறது. அங்கிருந்து தமிழ் சினிமா பிரபலங்களை தொடர்பு கொண்டு காலா பட நிலவரம் குறித்து விசாரித்து வருகிறாராம் ரஜினி.

அனைவரும் ஒரே மாதிரி ‘இது சூப்பர் ஸ்டார் படமில்லை’ என கூறினார்களாம். இதனால், அவர்களிடம் தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டதாக கூறுகிறார்கள். அதே போல் கமலிடம் தொடர்பு கொண்டு காலா படத்தை பற்றி விசாரித்திருக்கிறார் ரஜினி. ‘எதிர்பார்த்த ரிசல்ட் இல்லை.. வேற என்னத்த சொல்ல... பேசாம இருங்க அடுத்து நம்ம தேவர் மகன் -2 எடுப்போம்’ எனச் சொல்லி மையமாய் சிரித்தாராம் கமல். 

கமலின் இந்த வார்த்தை பிரயோகத்தில பல்வேறு அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன. தேவர் மகன் ஒரு குறிப்பிட்ட சாதியினரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். மாபெரும் வெற்றியை கமலுக்கு கொடுத்த படம். அத்துடன் அந்த சாதியினர் கமலுக்கு ஆதரவாளர்களாக இருப்பதாக கூறப்படுகிறது. காலா திரைப்படம் தலித் சாதி பற்றிய கதையமைப்பைக் கொண்டது. தலித் வாக்குகளை குறி வைத்தே காலா படத்தில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், படம் சரியாக போகவில்லை. இந்த நிலையில்தான் ‘தேவர் மகன் -2 எடுக்கலாம்’ என கமல், ரஜினியை கலாய்த்திருக்கிறார். கமலின் பேச்சு ரஜினிக்கு கவலையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்னொரு முக்கியத்தகவல்.. காலா படத்தில் காவல்துறையினரை ரஜினி துவம்சம் செய்யும் காட்சிகளும் எடுக்கப்பட்டு இருந்ததாம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கப்போய் அங்கு காவல்துறையினருக்கு ஆதரவாக பேசி விட்டு வந்தாரல்லவா..? அதன் பிறகு சென்னை திரும்பிய அவர், காலா படத்தில் போலீஸை அடிக்கும் காட்சியை நீக்கச் சொல்லி விட்டாராம். அந்தக் காட்சிகள் இடம்பெற்றிருந்தால், ரஜினியின் நிலை ரசிகர்களிடம் இன்னும் பரிதாபமாகி இருக்கும். 

அதுமட்டுமா..? கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் படத்தை பற்றியும் ரஜினியிடம் இப்போதே விமர்ச்சிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் சினிமா புள்ளிகள். அந்தப்படத்தில் பேராசிரியராக நடிப்பது மாஸ் ஹீரோவான உங்களுக்கு எடுபடுமா..? என பெரும்பாலானோர் கருத்துக்கூற, மேலும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார் ரஜினி!

இடையில் கோச்சடையான் விவகாரத்தில் நீதிமன்றம் மனைவி லதாவை எச்சரித்ததும் ரஜினியை ரொம்பவே அப்செட்டாக்கி விட்டதாக கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்..!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close